சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘சூரரை போற்று’ . நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ளார். சுதா கொங்காரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘காட்டுப்பயலே’ என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனைத்து பாடல்களும் பெரும் ஹிட் ஆனது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ” ஒவ்வொரு முறையும் உங்கள் இசையில் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். சூரரை போற்று பாடல்கள் கூடுதல் சிறப்பானதற்கு நீங்கள் தான் மிக முக்கியமான காரணம் ” என இசையமைப்பாளர்
ஜி.வி பிரகாஷை வெகுவாக பாராட்டியுள்ளார். இதற்கு ஜிவி “இன்னும் நிறைய வர உள்ளது சார் ! மிக்க நன்றி” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். “காட்டுப்பயலே” பாடல் தற்போது வரை 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.