V4UMEDIA
HomeNewsBollywoodஇந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் ரீமேகாகும் 'ஹெலன் ' !

இந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் ரீமேகாகும் ‘ஹெலன் ‘ !

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் “ஹெலன் ” . ஹெலன் படத்தை தற்போது தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

வினித் சீனிவாசன் தயாரிப்பில், இயக்குனர் மது குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியான படம் “ஹெலன்”. இந்த படம் மலையாளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் OTT வழியாக பலரும் கண்டு மகிழ்ந்தனர்.

இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ரீமேக் உரிமைக்காக போட்டியிட்டது. கடும் போட்டிக்கு இடையே தமிழ் ரீமேக் உரிமையை அருண்பாண்டியன் பெற்று தயாரித்து வருகிறார்.  “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். கீர்த்தி பாண்டியன் ஏற்கனவே தும்பா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹிந்தியில் ரீமேக் உரிமையை போனிகபூர் பெற்றுள்ளார். அப்படத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார்.

Most Popular

Recent Comments