V4UMEDIA
HomeNewsKollywood"சினம்" படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்

“சினம்” படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்

வேகத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் கடும் உழைப்பின் வழியே, புதிய இலக்கணம் வகுத்திருக்கிறது “சினம்” படக்குழு. அருண் விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சினம்” படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை துவங்கியது படக்குழு.

Image

கர் அருண் விஜய்யின் ஒத்துழைப்பு இல்லையெனில் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவர் தற்போது தொடர் வெற்றிகளுடன், ஒரே கட்டமாக பல படங்களில் நடித்து வருகிறார். எங்கள் அனைவருக்கும் ஆச்சர்யம் தந்தது என்னவெனில் இத்தனை படங்களில் நடித்தாலும் அவர் தனது கதாப்பாத்திரத்திற்கு தரும் உழைப்பு, அர்ப்பணிப்பு பிரமிப்பை தந்தது. ஒரு ஆக்‌ஷன் காட்சியை எடுத்துக்கொண்டிரும்போது அவருக்கு அடிபட்டு ரத்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ஆனால் கொஞ்சம் கூட அதனை பொருட்படுத்தாமல் உடனே தயாராகி அந்த காட்சியில் நடித்து முடித்தார். நம்பிக்கை மற்றும் உழைப்பின் வழியாக அவர் இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரிது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர்.

Image

இப்படத்தில் அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க, பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய  பாத்திரத்தில் நடிக்கிறார்.

Movie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் துவங்கவுள்ளது. மிக விரைவில் படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த நிலையில் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளனர் படக்குழுவினர். அருண் விஜய் மற்றும் விஜயகுமார் இன்று டப்பிங் பேசியுள்ளனர். அருண் விஜய் கெட்-அப் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Most Popular

Recent Comments