கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் சேதுராமன். அதன்பின் நடிகர் சந்தானுத்துடன் “வாலிப ராஜா, சக்கை போடு போடு ராஜா” போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமில்ல, சென்னையின் தலைசிறந்த தோல் சம்மந்தப்பட்ட மருத்தவர்களில் ஒருவரும் கூட. முடி உதிர்வது பற்றி இவர் கூறிய எளிய வழிகள் இளைஞர்கள் மட்டுமின்றி அனைவராலும் பாராட்டுப் பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு (மார்ச் 26) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
2016 ஆம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது, தற்போது ஒரு வயது குழந்தை உள்ளார். சேதுராமன் இறக்கும் போது அவரது மனைவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
சோகத்தில் மூழ்கியிருந்த அந்த குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மறைந்த நடிகர் சேது அவரது மனைவியின் வயிற்றில் மகனாக மறுபிறவி எடுத்துள்ளார். இது குறித்து அவரது தந்தை “சேதுவிற்கு சிங்க குட்டி பிறந்துள்ளான்” என உருக்கமாக கூறியுள்ளார்.