தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் நகுல். தனது விட முயற்சி மற்றும் உழைப்பினால் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்தார் நடிகர் நகுல்.
பிரபல நடிகை தேவயானியின் சகோதரார் நகுல். இவர் நடிப்பில் வெளிவந்த ‘காதலில் விழுந்தேன்’ மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக அப்படத்தில் வரும் “நாக்கு முக்கா” பாடல் பட்டி தொட்டி வரை இவரை கொண்டு போய் சேர்த்தது. அதன் பின் ‘மாசிலாமணி’ , ‘கந்தகோட்டை’ , ‘வல்லினம்’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார்.
நடிகராக மட்டுமின்றி படகராகவும் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன் என பல பெரிய படங்களில் பாடியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த கொண்டார் நகுல். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் நடிகர் நகுலுக்கு நேற்று இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.