பிக் பாஸ் முதன் முதலாக இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி. பலராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடா, மலையாளம் என பல மொழிகளில் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் NTR , நாணி , நாகார்ஜூனா என்ற முதல் மூன்று சீசனை பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தமிழை போல தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 கான வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த முறை தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்னணி நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்க உள்ளார். இதை நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கோட் சூட் உடையில் ஷூட்டிங்கில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டேன் ! லைட்ஸ், கேமிரா, ஆக்ஷன்” என பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் தெலுங்கு சீசன் 4கான ப்ரொமோ ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.