லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.
மாஸ்டர் படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். தளபதி விஜய் யுடன் மாளவிகா மோகனுக்கு இதுதான் முதல் படம். இவர் ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy birthday @MalavikaM_
Wishes from the team #master
pic.twitter.com/pJZKiTQDcG— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 4, 2020
இன்று (ஆகஸ்ட் 04) மாளவிகா மோகனன் தனது பிறந்தநாளை கொன்டுகிறார். ரசிகர்கள் #HBDMalavikaMohanan என்ற ஹேஷ் டேக்கில் உலகளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர். மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். மாஸ்டர் டீம் மாளவிகா மோகனனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, மாஸ்டர் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய்யுடன் அவர் இருக்கும் அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று இய்குனார் லோகேஷ் மாளவிகா மோகனன் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.