V4UMEDIA
HomeNewsKollywoodவீடியோ காலில் நண்பர்களுடன் பேசிய தளபதி விஜய் !

வீடியோ காலில் நண்பர்களுடன் பேசிய தளபதி விஜய் !

நண்பர்கள் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தங்களது நண்பர்கள் வட்டராதுக்குள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. #FriendshipDay என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில் எவ்ளோ உயரம் சென்றாலும் நண்பர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் தளபதி விஜய் நேற்று உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது கல்லூரி காலத்திலிருந்து உடன் இருக்கும் நீண்டகால நண்பர்களிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். குறிப்பாக தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரும் பிரபல தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் உடன் வீடியோ காலில் பேசியதை, சஞ்சீவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Maams @actorvijay pic.twitter.com/ZNVDsgQhQB— Sanjeev (@SanjeeveVenkat) August 2, 2020



சஞ்சீவ் மட்டுமின்றி பல நெருக்கமான நண்பர்கள் உடன் தளபதி விஜய் வீடியோ காலில் மனம் விட்டு பேசி சிரித்து மகிழ்ந்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தளபதி விஜய் தங்களுடன் வீடியோ காலில் என்ன பேசினார் எனபதை சஞ்சீவ் குறிப்பிடவில்லை.

Most Popular

Recent Comments