அருந்ததி, நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு, ஆத்தாடு, தப்பாங், ஒஸ்தி, ஆகாடு, தேவி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸால் நிலவும் ஊரடங்கில் உணவு மற்றும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல தனது சொந்த செலவில் பஸ் வசதி செய்து கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த மூன்று குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்து, அப்பா அம்மா இன்றி அனாதையான அந்த குழந்தைகளுக்கு யாரவது இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என வேண்டி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நடிகர் சோனு சூட், ” அவர்கள் நீண்ட காலம் அனாதையாக இருக்க போவதில்லை, இனி அவர்கள் என் பொறுப்பில் வளர்வார்கள்’ என டீவீட் செய்துள்ளார்.
They are no longer orphans.
They will be my responsibility ❣️ https://t.co/pT0hQd4nCx— sonu sood (@SonuSood) July 31, 2020
இந்த மனிதநேயமிக்க செயலை சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். படத்தில் வில்லனாக நடித்தாலும் ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.