தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். இவரது நடிப்பில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்துள்ளன. நடிகை பிரியா ஆனந்த் OTT யில் வெளியாகவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ , கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெண்குயின்’ , யோகிபாபு நடித்த ‘காக்டெய்ல்’ திரைப்படம் OTTல் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
I’ve had the good fortune of getting back to work for over 21 days!
Soo grateful to have the opportunity to make my digital debut in Hindi #Simplemurder
With stringent regulations the collaborative art of filmmaking continues..@pathak_sachin85 @Mdzeeshanayyub @JarPictures pic.twitter.com/l7haSW38p6— Priya Anand (@PriyaAnand) July 31, 2020
இந்த நடிகை பிரியா ஆனந்த் சோனி எல்.ஐ.வி OTT மேடையில் “சிம்பிள் மர்டர்”என்ற இந்தியில் தயாராகும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகை பிரியா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்
” 21நாட்களுக்கு மேல் திரும்பவும் வேலைக்கு திரும்பும் நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இதில் இந்தி “சிம்பிள் மர்டர்”எனது டிஜிட்டல் தளத்தில் அறிமுகம் ஆகும் வாய்ப்பை பெறுவதற்கு கடுமையான விதிமுறைகளுடன் திரைப்பட தயாரிப்பில் கூடுகளை தொடர்ந்து “சிம்பிள் மர்டர்” வெப் சீரியஸில் சச்சின் பதக் இயக்கியுள்ளார் என தெரிவித்துள்ளார்.