V4UMEDIA
HomeNewsKollywood"சந்திரமுகி - 2" ஹீரோயின் யார் ? ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

“சந்திரமுகி – 2” ஹீரோயின் யார் ? ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம் சந்திரமுகி. அப்படம் அதுவரை ரஜினி படங்கள் செய்த அனைத்து வசூல் சாதனையையும் முறியடித்து உலகமெங்கும் மாபெரும் ஹிட்டானது. இப்படத்தை சிவாஜி ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு மாபெரும் பொருட்செலவில் தயாரித்தார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் ஆசியுடன் சந்திரமுகி-2 படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பி.வாசு அவர்கள் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்காக வாங்கிய 3 கோடி அட்வான்ஸ் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

.


இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ஹீரோயின் யார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். சந்திரமுகி -2 திரைப்படத்தில் ஜோதிகா அல்லது சிம்ரன் நடிக்கிறார்களா இல்லை கீரா மோத்வானி நடிக்கிறார்கள் என பொய்யான செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். தற்போது படத்தின் ப்ரீ ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அனைத்து வேலைகளும் முடிந்ததும் யார் நடிப்பார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ட்வீட் செய்துள்ளார்.

Chandramukhi 2 pic.twitter.com/sArxsvp3XN— Raghava Lawrence (@offl_Lawrence) August 1, 2020

Most Popular

Recent Comments