சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் ஸ்டைல் மன்னனாக வலம் வருகிறார். இவரது மனைவி லதா ரஜினிகாந்த். ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு பேரும் தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக வலம் வருகின்றனர்.
குழந்தைகளின் மழலைகள் குணங்கள் மற்றும் சமுதாயத்தில் மழலைகள் சந்திக்கும் சூழ்நிலைகள் குறித்தும், மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் மனிதர்கள் பற்றிய பாடல் ஒன்றை தானே எழுதி இசையமைத்து உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இப்பாடலை நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
“குழந்தைகளையே தனது உலகமாக மாற்றிக்கொண்ட தாய் உள்ளத்தில் இருந்து ஒரு பாடல் .. லதா ரஜினிகாந்தின் அற்புதம் !!! அன்பு தானே எல்லாமே” என தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
“அன்பு தானே எல்லாமே” என தொடங்கும் இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.