V4UMEDIA
HomeNewsஇயக்குனர் கொரட்டலா சிவாவுடன் இணையும் அல்லு அர்ஜுன் !

இயக்குனர் கொரட்டலா சிவாவுடன் இணையும் அல்லு அர்ஜுன் !

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். ஆந்திராவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவரது நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் உலகமெங்கும் மெகாஹிட் அடித்தது. இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்க பல தயரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

Image

தற்போது அல்லு அர்ஜூன் – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் முதல் படத்திற்கு “PUSHPA” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். ஊரடங்கு முடிந்ததும் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்படும்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் கோரட்டலா சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். தனது அடுத்த படத்தின் அப்டேட்டை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்தப் படத்திற்கு ‘AA21’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Very much elated to announce my next film #AA21 with Koratala Shiva garu . Been looking forward for this for quiet a while . My best wishes to Sudakar Garu for his 1st venture . Sandy , Swathi & Nutty this is my way of showing of my love for you guys . pic.twitter.com/uwOjtSAMJV— Allu Arjun (@alluarjun) July 31, 2020


“எனது அடுத்த படம் # AA21-க்காக கோரட்டலா சிவாவுடன் கூட்டணி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட காலமாக இதை எதிர்பார்த்திருந்தேன். சுதாகரின் முதல் படத்திற்காக எனது வாழ்த்துக்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

Most Popular

Recent Comments