V4UMEDIA
HomeNews"பாகுபலி" இயக்குனர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று உறுதி !!

“பாகுபலி” இயக்குனர் ராஜமெளலிக்கு கொரோனா தொற்று உறுதி !!

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பல சினிமா பிரபலங்களும் வைரஸ் தாக்கத்தால் அவதிக்குள்ளாயினர். சமீபத்தில் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விஷால் உள்ளிட்ட பலர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நான்-ஈ , பாகுபலி 1&2 போன்ற மெகாஹிட் படங்களை இயக்கி உலகம் முழுவதும் வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்ற பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

My family members and I developed a slight fever few days ago. It subsided by itself but we got tested nevertheless. The result has shown a mild COVID positive today. We have home quarantined as prescribed by the doctors.— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

“எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. எனவே நாங்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டோம். பரிசோதனை முடிவில் எங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவரின் அறிவுரைபடி நாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அரசாங்கத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறோம். கொரோனா வைரஸ் தொற்று சரியானதும் நாங்கள் அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Baahubali' maker SS Rajamouli and family test positive for ...

Most Popular

Recent Comments