பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் படம் “ஃப்ரெண்ட்ஷிப்” . அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் “லாஸ்லியா” நடிக்கிறார். லாஸ்லியாவிற்கு இது தான் முதல் படம். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஷாம் சூர்யா தயாரிப்பில் ஜான் பால்ராஜ் இயக்குகிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரஜினிகாந்த் (Superstar Anthem) என்ற படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் டே அதாவது நண்பர்கள் தினமான இன்று ஒரு வீடியோவை வெளியிட முடிவு செய்தனர் படக்குழுவினர். இன்று மாலை 5 மணிக்கு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.