எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் “லாபம்” . நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது. இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#Laabam dubbing starts ☺️@VijaySethuOffl @shrutihaasan #SPJhananathan @immancomposer @KalaiActor @7CsPvtPte @Aaru_Dir @SaiDhanshika @yogeshdir @netflixindia @LahariMusic @proyuvraaj pic.twitter.com/Twbxm7jEZf— VSP_Productions (@vsp_productions) July 29, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளை செய்ய மாநில அரசு உத்தரவு அளித்துள்ளது. பல படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய் சேதுபதி யின் லாபம் படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக விஜய் சேதுபதி மற்றும் கலையரசன் டப்பிங் ஆரம்பித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.