பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன் நடித்த படம் ‘தில் பெச்சாரா’. இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
‘தில் பெச்சாரா’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் சில தினங்களுக்கு முன் வெளியானது. சுஷாந்த் சிங்கின் நடிப்பும் படத்தின் எதார்த்த திரைக்கதையும் மக்கள் அனைவரது கவனத்தையும் பெற்றவுள்ளது. சுஷாந்தின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரை ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி முதல் நாளிலே மட்டுமே 95 மில்லியன் பார்வையாளர்களை படத்தை பார்த்துள்ளனர் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார். இது மாபெரும் சாதனை. இந்தியாவில் வெளியான ஒரு படத்தை 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 95 மில்லியன் பேர் OTT-ல் பார்த்தது மிகப்பெரிய சாதனை தான். இதை கணக்கிட்டால் முதல் நாள் வசூல் மட்டுமே 2000 கோடி தாண்டும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.