நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். பொதுவாக அவரது பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், மக்களுக்கு அன்னதானம் வழங்குவார்கள் இது மட்டுமின்றி ரத்ததானம் செய்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவலால் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டனர். சில இடங்களில் அன்னதானம் வழங்கினார்கள்.
சமூக வலைத்தளங்களில் தனுஷ் ரசிகர்கள் #HappyBirthdayDhanush என உலகளவில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டுகின்றனர். ஜெகமே தந்திரம் மற்றும் கர்ணன் படக்குழுவினர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ராக்கிட சிங்கிள் மற்றும் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இது மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழில்களிலும் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
🙏🙏🙏 pic.twitter.com/8zFMgbJuAu— Dhanush (@dhanushkraja) July 29, 2020
இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ். அதில்
” என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..
உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன்.
அனைத்து Common DPக்கள், Mashup க்கள் ,வீடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த Countdown டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி .
அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான் உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகின்றேன்.
மேலும் எனக்கு தொலைப்பேசி வாயிலாகவும்,பத்திரிக்கை மூலமாகவும் ,சமூக வலைத்தளங்கள் வழியாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரைத்துறையினர் ,சமூக ஆர்வலர்கள் ,அரசியல் பெருமக்கள் ,நண்பர்கள மற்றும் பண்பலை ,ஊடகம் , தொலைக்காட்சி அன்பர்களுக்கும் , என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் ,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் ” என கூறியுள்ளார் தனுஷ்.