நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பிறகு நெப்போட்டிஸம் குறித்து பாலிவுட்டில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
சினிமா துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் (நெப்போட்டிசம் ) குறித்து பலரும் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து தென்னிந்திய சினிமாவிலும் விவாதங்கள் எழுந்துள்ளன. நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் மற்றும் நடிகர் சாந்தணு ஆகியோர் இதுகுறித்து வெளிப்படையாக தங்களது சமூக வலைத்தளங்களில் பேசியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமலின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நெப்போட்டிஸம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் ‘நான் திரைத்துறைக்கு கால் பதிக்க காரணமே என் பெற்றோர் தான். அவர்கள் இருவரும் இந்த துறையில் இருந்ததால் என் ஆரம்பக் கால சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் பெற்றோர் பெயரை வைத்துக் கொண்டு நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது. திறமை இருந்தால் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும்’ என கூறியுள்ளார்.