கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிட்ஸா, ஜிகர்தாண்டா, இறைவி, பேட்ட என பல ஹிட் படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்திற்கு பின் தனுஷை வைத்து “ஜெகமே தந்திரம்” படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்த் மற்றும் ரிலயன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி லண்டன்-இல் படமாக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் விநியோக உரிமையை TRIDENT ஆர்ட்ஸ் ரவீந்தரன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு, ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட ரகிட’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. “எனக்கு ராஜா”வா நான் வாழுறன்… எதுவும் இல்லனாலும் ஆளுறன்” , “அந்த 4 பேர பாத்தது இல்ல இதுவரை நானும், எனக்கு தேவைப்பட்ட நேரம் அந்த பரதேசிய காணும்” என்ற பாடல் வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.