யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கிய (KGF) கே.ஜி.எப் திரைப்படம் கன்னட திரை உலகின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும் மீதமுள்ள காட்சிகளை விரைவில் படமாக்க படகுழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘Unveiling the Brutality’ என்ற டைட்டிலுடன் ஜூலை 29 காலை 10 மணிக்கு முக்கிய அப்டேட் வெளியாவதாக கூறப்பட்டுள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளையும் குறிப்பிட்டுள்ளதால் படத்தின் ட்ரெய்லர் வெளியாவது குறித்த அப்டேட் என ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
















