V4UMEDIA
HomeNewsKollywoodதமிழ்நாட்டு ஆண்மான்களை வட இந்திய சினிமா ஆதரிப்பதில்லை - வைரமுத்து

தமிழ்நாட்டு ஆண்மான்களை வட இந்திய சினிமா ஆதரிப்பதில்லை – வைரமுத்து

இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் பணியாற்ற பல முன்னணி இயக்குனர்கள் மட்டுமின்றி ஹாலிவுட் இயக்குநர்களே போட்டி போட்டு காத்திருக்கின்றனர். ஆனால், அவரது பாலிவுட் பட வாய்ப்புகளை தட்டி பறிக்கவே ஒரு கும்பல் வேலை செய்வதாக அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹானா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சுஷாந்த்தின் கடைசிப் படமான “தில் பேச்சாரோ” படத்திற்கு இசையமைக்க ரஹ்மானிடன் செல்ல வேண்டாமெனப் அப்படத்தின் இயக்குனரிடம் பலரும் தடுத்ததாகவும் இதேபோல் தனக்கான பல பெரிய பட வாய்ப்புகளை தட்டி பறிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மானின் இந்த பேட்டி குறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது ஆதரவை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

அன்பு ரகுமான்! @arrahman
அஞ்சற்க.
வட இந்தியக் கலையுலகம்
தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு
ஆண்மான்களை ஆதரிப்பதில்லை.
இரண்டுக்கும் உயிர்வாழும்
எடுத்துக்காட்டுகள் உண்டு.
ரகுமான்! நீங்கள் ஆண்மான்;
அரிய வகை மான்.
உங்கள் எல்லை
வடக்கில் மட்டும் இல்லை.

Most Popular

Recent Comments