2007ல் வெளியான மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் ஆதி. பின்பு அரவான், ஆடு புலி, அய்யனார், மரகத நாணயம் படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அரவான் மூலம் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். பின் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் கவனம் செலுத்துகிறார். பார்ட்னர், கிளப் என இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக சக மனிதர்களுடன் பழகவே பயப்படும் இந்த நேரத்திலும், தான் தினமும் சாலையில் பார்க்கும் ஒரு சாமானிய மனிதருடன் ஆதி நடனமாடி வெளிப்படுத்திய ஸ்டண்ட், அவருடைய அன்பையும், சக மனிதனை மதிக்கும் உணர்வையும் வெளிப்படுத்தி உள்ளது.
இதை ஆதி தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இறுதியில் அந்த நபர் நடிகர் ஆதியைப் பார்த்து, “காசு, பணம் தேவை இல்லை தலைவா, உன் அன்புக்கு நான் அடிமை!!” என கூறியுள்ளார். ஆதியின் இந்த செயல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
I often see this man on my way back home. Today we said HI!
“Kaasu panam thevai illa thailaiva…Un anbu ku naan adimai!!”
P.S: LOVE above allll! pic.twitter.com/pFIxA3QmyP— Aadhi’s (@AadhiOfficial) July 24, 2020