V4UMEDIA
HomeNewsBollywoodசாலையில் சிலம்பம் சுற்றிய மூதாட்டிக்கு உதவி செய்யும் சோனு சூட் !!

சாலையில் சிலம்பம் சுற்றிய மூதாட்டிக்கு உதவி செய்யும் சோனு சூட் !!

அருந்ததி, நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு, ஆத்தாடு, தப்பாங், ஒஸ்தி, ஆகாடு, தேவி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸால் நிலவும் ஊரடங்கில் உணவு மற்றும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல தனது சொந்த செலவில் பஸ் வசதி செய்து கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தான் சிலம்பம் சுற்றும் கலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு உதவிகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Can I get her details please. Wanna open a small training school with her where she can train women of our country some self defence techniques . https://t.co/Z8IJp1XaEV— sonu sood (@SonuSood) July 24, 2020

இந்நிலையில் நடிகர் சோனு சூட் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வந்துள்ளார். இது குறித்து சோனு சூட் தனது சமூக வலைத்தளங்களில் கூறியதாவது :

“அவரை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைக்குமா? அவரோடு சேர்ந்து ஒரு சிறிய பயிற்சி பள்ளி தொடங்கி நம் நாட்டு பெண்களுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

Sonu Sood, Riteish To Help Old Woman Performing Martial Arts On ...

இந்த மனிதநேயமிக்க செய்யலை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். படத்தில் வில்லனாக நடித்தாலும் ரியல் வாழ்க்கையில் ஹீரோவாக மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

Most Popular

Recent Comments