V4UMEDIA
HomeNewsKollywoodமாபெரும் சாதனை படைத்த நடிகர் சிவகார்த்திகேயனின் கனா !

மாபெரும் சாதனை படைத்த நடிகர் சிவகார்த்திகேயனின் கனா !

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வெளியான “கனா” திரைப்படத்தின் இரு பாடல்கள் யுடியூபில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வெளியான “கனா” திரைப்படம் 2018ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியானது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான திரைப்படம் தான் “கனா”. எதார்த்த வசனங்கள் மற்றும் திரைக்கதையால் மாபெரும் வெற்றி பெற்றது.

Image

அதுமட்டுமின்றி கனா படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி என பெரிய அளவில் ஹிட் அடித்தன. குறிப்பாக ‘வாயாடி பெத்த புள்ள’ மற்றும் ‘ஒத்தையடி பாதையிலே’ ஆகிய இரு பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இந்த 2 பாடல்கள் ஒலிக்காத கிராமப்புறங்கள் இல்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் அந்த இரண்டு பாடல்களும் யு டியூபில் தலா 10 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரே படத்தை சேர்ந்த இரு பாடல்கள் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

Our #Kanaa is the first ever Tamil film album to have two songs with 100M+ views. We thank our music director @dhibuofficial for this superhit album💐😇#AstonishingTwo100MSongsForKanaa@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Arunrajakamaraj | #Sathyaraj | @aishu_dil | @Darshan_Offl pic.twitter.com/paXWvW8A9D— Sivakarthikeyan Productions (@SKProdOffl) July 24, 2020

Most Popular

Recent Comments