‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சந்தானம். அதன் பின் பல படங்களில் காமெடியனாக நடித்து தமிழ் சினிமாவின் நம்பர்.1 காமெடியனாக வலம் வந்தார். பின் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ஹிட் அடித்தன.
இந்த நிலையில் நடிகர் சந்தானம் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிஸ்கட் கம்பெனி வைத்திருக்கும் ஒருவர் வாழ்க்கையில் எப்படி கடினமாக உழைத்து முன்னேறுகிறார் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
King Rajasimha @iamsanthanam Rom-Com #Biskoth Coming Soon
Wait & Watch an unexpected one !! #BiskothTrailerSoon @masalapixweb @mkrpproductions @shammysaga @tridentartsoffl @johnsoncinepro @EditorSelva @radhanmusic pic.twitter.com/7bXs4naPl7— kannan (@Dir_kannanR) July 22, 2020
சந்தானம் ஜோடியாக அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பல்லா என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மிக விரைவில் வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குனர் கண்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.