மறைந்த இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ஜானி. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் இரண்டு வேடங்களிலும், ஸ்ரீதேவி, சுருளி ராஜன் என பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். இயக்குனர் ஜான் தளபதி விஜய் யின் சச்சின் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், நடிகர் அஜித்திற்கு ஜானி படம் மிகவும் பிடித்துப்போய் அதைப் பற்றி என் தந்தையிடம் இதை நீங்கள் ரீமேக் செய்வதாக இருந்தால் நான் நடிக்கிறேன் என கூறியதாக கேள்விப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் எனது அப்பாவுக்கு அவர் இயக்கிய “முள்ளும் மலரும்” , “ஜானி” உள்ளிட்ட எந்த படத்தையும் ரீமேக் செய்ய பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.