V4UMEDIA
HomeNewsKollywoodஇன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகர் சூர்யா !

இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகர் சூர்யா !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூர்யா. நடிப்பது மட்டுமின்றி நல்ல கதைகளை தேர்வு செய்து தயாரித்தும் வருகிறார். நடிகர் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு
‘வாடிவாசல்’ படத்தின் போஸ்டர் மற்றும் சூரரை போற்று படத்தின் “காட்டு பயலே” பாடல் ப்ரோமோ என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தனது பிறந்த நாளான இன்று போட்டோ ஒன்றை வெளியிட்டு “அனைவரையும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம்” என போஸ்ட் செய்துள்ளார்.

Image

Most Popular

Recent Comments