லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். படம் எதிர்பார்த்த அளவு இல்லாததுனால் சூர்யா கேரியரில் படுதோல்வி அடைந்தது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைக்க என மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதுவரை தமிழ் சினிமா கண்டிராத தோல்வி படமாக அமைந்தது அஞ்சான். இதற்கு பலவீனமான திரைக்கதை மட்டுமே காரணம் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் அஞ்சான் திரைப்படம் இந்தியில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலிஸான அந்த திரைப்படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. யுடியூபில் வெளியான கடார்நாடக் கில்லாடி திரைப்படம் 14 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.
Everyone ran down our #Anjaan by @dirlingusamy sir with @Suriya_offl sir. Look at the Hindi viewership of the dubbed version #KhatarnakKhiladi2 … 140 Million+ views. Each market reacts in a different way. Good learning though
pic.twitter.com/XAXmCIBB13— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) July 21, 2020
இது குறித்து அஞ்சான் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான தனஞ்செயன் ‘அனைவரும் அஞ்சான் படத்தை மற்றும் சூர்யா, லிங்குசாமி இருவரையும் கேலி செய்தார்கள். ஆனால் இந்தி ரசிகர்கள் 14 கோடி பேர் இந்த படத்தை பார்த்துள்ளனர். ஒவ்வொரு மொழி சந்தையும் வேறு மாதிரி. ஆனாலும் அஞ்சான் ஒரு நல்ல பாடம்’ என ட்வீட் செய்துள்ளார்.