V4UMEDIA
HomeNewsKollywoodசூர்யா பிறந்தநாளை முன்னிட்டு 'வாடிவாசல்' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் !

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் !

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘வாடிவாசல்’. இப்படத்தினை வி கிரேயஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இது ஜிவி பிரகாஷ்குமார் அவர்களுக்கு 75வது படம். அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் வெற்றி மாறன், ஜிவி பிரகாஷ், கலைப்புலி எஸ் தாணு இணையும் படமாகும். ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை வாடிவாசல் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்  ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார்.

Suriya's powerful first look in 'Vaadivaasal' released as grand ...

தயாரிப்பாளர் தாணு அவர்கள் நடிகர் சூர்யாவுக்கு பிறந்த நாள் தெரிவித்த கவிதை இதுதான்:

தம்பி…
இன்று உங்கள் பிறந்த நாள்
என்றும் அது சிறந்த நாள்
இனிய இந்நாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று
தேக பலம்
பாத பலம்
ஆயுள் பலம் பெற்று
வாழிய பல்லாண்டு….

Most Popular

Recent Comments