கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ , கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெண்குயின்’ , யோகிபாபு நடித்த ‘காக்டெய்ல்’ திரைப்படம் OTTல் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் ‘லாக்கப்’ திரைப்படத்தையும் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். வெங்கட் பிரபு, வைபவ், பூர்ணா, வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ள ”லாக்கப்” என்ற திரைப்படம் ஜீ-5 ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில், நடிகர் நித்தின் சத்யாவின் தயாரிப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது. “லாக்கப்” அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜீ 5 இல் வெளியாக உள்ளது.