கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன.
இந்நிலையில் யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் டி.கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிகர் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், சோனம் பாஜ்வா உள்ளிட்டோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ‘காட்டேரி’ திரைப்படம் ஜீ5 OTT தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.