தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் “கவுதம் வாசுதேவ் மேனன்” . “மின்னலே” , “வேட்டையாடு விளையாடு” , “காக்க காக்க” , “பச்சைக்கிளி முத்துச்சரம்” , “வாரணம் ஆயிரம்” , “விண்ணைத்தாண்டி வருவாயா” என பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” மற்றும் “ஒரு சான்ஸ் கொடு” வெளியிட்டார். இவை இரண்டுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் “ஜோஷுவா: இமை போல் காக்க” படத்தின் “நான் உன் ஜோஷுவா” வீடியோ பாடலை நேற்று வெளியிட்டுள்ளார். இப்படத்தில் வருண் மற்றும் ராஹெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
It’s also the time to introduce Krishna as the villain in the film Joshua.. Thank you @Actor_Krishna for agreeing to do this for me! In return, you are looking really good brother😊— Gauthamvasudevmenon (@menongautham) July 16, 2020
இப்படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக், தற்போது வெளியிடப்பட்டுள்ள நான் உன் ஜோஷுவா பாடலையும் இவரே பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இப்படத்தில் கழுகு, பண்டிகை, மாரி 2 படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் கிருஷ்ணா தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்