சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாலை தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் நடிகர் அஜித்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகரின் அஜித்தின் வீட்டிற்கு நீலாங்கரை போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சோதனை செய்து வருகின்றனர். இதுவரை நடந்த விசாரணையில் வெறும் புரளி என தெரிய வந்துள்ளது.
தொலைபேசியில் மிரட்டிய அந்த மர்ம நபரை கைது செய்து விசாரித்தால் மட்டுமே ஏன் அவர் நடிகர் அஜித் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தார் என விபரம் தெரியவரும் என சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தளபதி விஜய் வீட்டிற்கும் இதே போல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.