அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருந்த “ஓ மை கடவுளே” படம் பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. ரித்திகா சிங் காதனையாகியகவும், வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் நடித்தது படத்திற்கு கூடுதல் சிறப்பு. இப்படத்தின் கதை மற்றும் வசனங்கள் மிக யதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்துவிட்டது. நட்பு, காதல், கல்யாணம் , காமெடி என அத்தனை அம்சங்களும் சரியான விகிதத்தில் கலந்திருந்ததால் இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
அக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் மெகா ஹிட் அடித்த இப்படத்தை தற்போது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மூன்று மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், “ஓ மை கடவுளே சூப்பர்… இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி நேர்த்தியாக உள்ளது. இயக்குநர் அஷ்வத் அருமையா பண்ணியிருக்கீங்க, அசோக் செல்வன் நீங்க நேச்சுரலான நடிகர்” என படத்தை வெகுவாக பாராட்டி தள்ளியுள்ளார்.
#OhMyKadavule… Enjoyed every bit of it… Superb performances, brilliantly written and directed @Dir_Ashwath. 👏👏👏@AshokSelvan you’re a natural👌👍👏 pic.twitter.com/Ozxlz0EP4Q— Mahesh Babu (@urstrulyMahesh) July 18, 2020
இதனை கண்டு கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றனர் படகுழுவினர். இதன் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே “ஓ மை கடவுளே” படம் அதிக கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.