வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் ரம்யா, இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) என்ற சிறிய தொடர் நிகழ்ச்சி ஒன்றை வழங்குகிறார். எல்லோரும் விரும்பிப் பார்க்கும் வகையில், மாறுபட்ட உள்ளடக்கம் கொண்ட இவ்வகை நிகழ்ச்சி எதுவும் இணையத்தில் இதுவரை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களின் இரைச்சல்களில் நம்மைத் தொலைத்திருப்பதை மறுபரிசீலனை செய்வதுடன், மகத்தான தருணங்களை நமக்கு வழங்கும் மனிதர்கள்பால் நமது கவனத்தை திருப்புவது பற்றிய நிகழ்ச்சி இது.
இந்த சிறிய தொடர் நிகழ்ச்சியை எழுதி இயக்கும் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…
“நம் மனதை செப்பனிடும் விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது கற்றுக் கொள்ளத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வாழ்க்கை நமக்கு ஆழமான பாடத்தைக் கற்றுத் தருகிறது. சுற்றுச் சூழலை நான் புரிந்து கொண்ட விதத்தை,