V4UMEDIA
HomeNewsHollywoodஎக்ஸ்டிராக்ஸன் - அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் ! பட்டியல் வெளியிட்ட நெட்பிளிக்ஸ்

எக்ஸ்டிராக்ஸன் – அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் ! பட்டியல் வெளியிட்ட நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களின் பட்டியல் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வீட்டுல இருந்தபடியே தொலைக்காட்சி, மொபைல், இணையம் வழியாக புதிய படங்களை பார்த்து ரசித்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.



இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே 260 கோடி சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம். ஆனால் 2019 ஆண்டு முழுக்கவே இதற்கு 280 கோடி சந்தாதாரர்கள் தான் கிடைத்தார்கள். இத்தகவலை அதிகாபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களின் பட்டியல் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

1. எக்ஸ்டிராக்ஸன் – 99 மில்லியன் பார்வைகள்
2. பர்ட்பாக்ஸ் – 89 மில்லியன் பார்வைகள்
3. ஸ்பென்ஸர் கான்பிடன்சியல் – 85 மில்லியன் பார்வைகள்
4. 6 அண்டர்கிரவுண்ட் – 83 மில்லியன் பார்வைகள்
5. மர்டர் மிஸ்டரி – 73 மில்லியன் பார்வைகள்
6. தி ஐரிஷ்மென் – 64.2 மில்லியன் பார்வைகள்
7. டிரிபிள் பிராண்டியர் – 63 மில்லியன் பார்வைகள்
8. தி ராங் மிஸ்ஸி – 59 மில்லியன் பார்வைகள்
9. தி பிளாட்பார்ம் – 56.2 மில்லியன் பார்வைகள்
10. தி பெர்பெக்ட் டேட் – 48 மில்லியன் பார்வைகள்

Most Popular

Recent Comments