பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதற்கு முன் நடித்த படம் ‘தில் பேச்சாரா’. இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
‘தில் பேச்சாரா’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜூலை 24ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சில தினங்களுக்கு முன்பு தான் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் டைட்டில் ட்ராக் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றவுள்ளது.
இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரகுமானின் மகள் ரஹீமா ரகுமான் கீபோர்டில் ‘தில் பேச்சாரா’ பாடலை வாசிக்கும் வீடியோவை ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.