கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் மூன்று மாதத்துக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. பல நடிகர்கள் OTT தளத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் இப்போது ஒட்டுமொத்தமாக 17 ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை நேரடியாக ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளது. இது குறித்த முன்னோட்டத்தை இப்போது வெளியிட்டுள்ளது.
- குஞ்சான் சக்ஸேனா
- டோர்பாஸ்
- டோலி கிட்டி அவ்ர் வோ சமாக்தே சிதாரே
- ராட் அகேலி ஹாய்
- லூடோ
- க்ளாஸ் ஆஃப் 83
- ஜின்னி வெட்ஸ் சன்னி
- எ சூட்டபிள் பாய்
- மிஸ்மேட்ச்டு
- ஏகே vs ஏகே
- சீரியஸ் மேன்
- ட்ரிப்ஹான்கா
- காலி குஹி
- பாஹ் பியனி பாஹ்
- பாம்பே பிஹம்ஸ்
- மசாபா மசாபா