“தளபதி விஜய்”யின் தீவிர ரசிகையான சங்கீதாவை தனது பெற்றோர் சம்மதத்துடன் 1999ம் ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய திருமணத்தின் போது தளபதி விஜய், நடிகை ஷாலினியுடன் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் நடித்து கொண்டிருந்தார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது மனைவி சங்கீதாவை திடீரென அழைத்த வந்த தளபதி விஜய்க்கு செட்டில் இருந்தவர்கள் மாலை அணிந்து இருவரையும் கௌரவப்படுத்தினர்.
பல வருடங்கள் கழித்து இந்த புகைப்படம் தற்ப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை ஷாலினி இருப்பது தான் அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது. மேலும் விஜய்க்கு திருமணம் நடந்த ஒரு சில மாதங்களில் ஷாலினி- அஜித் திருமணம் நடந்தது என குறிப்பிடத்தக்கது.