V4UMEDIA
HomeNewsKollywoodவெப் சீரிஸில் கால் பதிக்கும் நடிகர் சரத்குமார்

வெப் சீரிஸில் கால் பதிக்கும் நடிகர் சரத்குமார்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் திரையரங்கு, மால்கள் என அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்னும் மூன்று மாதத்துக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

Image
இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் என அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் (OTT) ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. பல நடிகர்கள் OTT தளத்தில் நடிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் நேற்று (ஜூலை 14) பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அவரது மனைவியான ராதிகா சரத்குமார் ‘Bird of Prey – The Hunt Begins’ என்ற போஸ்டரை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதனுடன், “இந்த நல்ல நாளில் OTT உலகத்திற்கு உங்களை வரவேற்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் சரத்” என வாழ்த்தியுள்ளார்.

Most Popular

Recent Comments