தியாகராஜன் குமாரராஜா இதுவரை இயக்கியது இரண்டே படங்கள் – ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ். ஆனால இவரது திரைக்கதை சொல்லும் விதத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் அதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் வாங்கி கொடுத்தது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் முகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற பஹத் பாசில் தற்போது மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்தப் படத்திலும் தான் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இப்போதே பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.