செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் “துக்ளக் தர்பார்”. இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது. இதர படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் தான் நடிக்க முடியாமல் போனது பற்றி வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
‘இந்தியன் – 2’ படத்துல கால்ஷீட் பிரச்னையால நடிக்க முடியாமல் போனது. ஆனா, அவர்கூட சேர்ந்து நடிக்க விருப்பப்படுறேன். அவரோட ஒரு காட்சியிலாவது நடிக்கணும்னு ஆசைப்படுறேன். நடந்துடும்னு நம்புறேன்’’ என கூறியுள்ளார்.