லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகன், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அளித்துள்ள பேட்டியில், “மாஸ்டர்” படத்தின் வெளியீட்டை பற்றி கூறியுள்ளார். படம் எப்ப ரிலீஸ் எப்பனு தான் எல்லோரும் கேட்டுட்டே இருக்காங்க. ஓ.டி.டி-யில் ரிலீஸ் செய்யலாமே என பலர் கேட்டனர் ஆனால் நான் அனைவரிடமும் கூறும் பதில், “ஓ.டி.டி-யில் மாஸ்டர் ரிலீஸ் ஆகாது. இது மிகப்பெரிய பொருட்செலவில் உருவான படம். தளபதி விஜய் ரசிகர்கள் அவர் படங்களை தியேட்டரில் கொண்டாட்டத்தோடுதான் பார்ப்பார்கள். எவ்வளவு லேட்டானாலும் படம் தியேட்டரில் தான் வரும்.
கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்து எப்ப தியேட்டர்கள் திறந்தாலும் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் தயார். அது தீபாவளியாகவும் இருக்கலாம், பொங்கலாகவும் இருக்கலாம்” என கூறியுள்ளார்.