லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகன், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தளபதி விஜய் மற்றும் மாஸ்டர் படத்தில் நடித்தது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை விஜய் சேதுபதி பகிர்நது கொண்டார். அதில், “முதல்ல இயக்குனர் லோகேஷ் என்கிட்ட கதை சொல்லல. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்துல சதீஷ் ன்னு ஒருத்தர் நடிச்சிருப்பார். அவர்தான் ‘லோகேஷ் கனகராஜ் படத்துல வில்லன் கேரக்டர் இருக்கு. நீ பண்ணுனா நல்லாருக்கும். ஆனா, உன்கிட்ட கேட்கத் தயங்குறார்’ ன்னு சொன்னார். உடனே இயக்குனர் லோகேஷிடம் பேசினேன். படத்தோட லைன் மட்டும் தான் கேட்டேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘எந்த இடத்துலயும் துளி கூட நல்லவன் கிடையாதுண்ணே’னார். ‘இதைத்தான் நானும் எதிர்பார்க்குறேன்’ ன்னு சொல்லிட்டு உடனே கமிட்டாகிட்டேன்.
ஷூட்டிங் ஷிமோகால நடந்தது. அங்க போனப்போதான் முழு கதையையும் கேட்டேன். கொடூரமான வில்லனா நடிக்க வாய்ப்பு கிடைக்குறது பாக்கியம்னு சந்தோசப்பட்டேன். ‘விஜய் சார் எப்படியிருப்பாரோ’ ன்னு நினைச்சிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். பழகுவதற்கு மிக எளிமையான மனிதர், கம்ஃபர்ட்டபுள், ரொம்ப ஸ்வீட். ஆடியோ ரிலீஸ்ல கொடுத்த முத்தம் எங்கள் நட்பை சொல்லும் ன்னு நினைக்குறேன்.
‘மாஸ்டர்’ திரைப்படம் மிக பிரம்மாண்டமாக வந்திருக்கு, நல்லாருக்குன்னு சொன்னாங்க. தளபதி விஜய் சாருக்கும் பிடிச்சிருக்குன்னு கேள்விப்பட்டேன். மக்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன். டிரெய்லர் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது.’’ என கூறியுள்ளார்.