பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் படம் “ஃப்ரெண்ட்ஷிப்” . அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் “லாஸ்லியா” நடிக்கிறார். லாஸ்லியாவிற்கு இது தான் முதல் படம். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இப்படத்தை ஷாம் சூர்யா தயாரிப்பில் ஜான் பால்ராஜ் இயக்குகிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். அதில் ரஜினிகாந்த் (Superstar Anthem) என்ற படத்தின் முதல் பாடல் நேற்று மாலை வெளியிடப்படபட்டது. நடிகர் சிம்பு பாடியிருக்கும் இப்பாடலை ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


























