இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் இந்தாண்டு வெளியான “சைக்கோ” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கடைசியாக இயக்கி வந்த “துப்பறிவாளன் 2” படத்தில் இருந்து நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக விலகினார். அடுத்த படமாக அருண் விஜய் மற்றும் சிம்பு வைத்து இயக்க உள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். கொரோனா லாக்டவுன் நேரத்தில் திரைக்கதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் “பிதா” என்ற புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் மிஷ்கின். இயக்குனர் மிஷ்கினோடு இணைந்து இந்த படத்தை ஸ்ரீ கிரீன் சரவணன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளன. இப்படத்தை மிஷ்கின் தம்பி ஆதித்யா இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் மதியழகன் நடிக்கவுள்ளார். உடன் ராதாரவி, கலையரசன், அனு கீர்த்தி வாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். நேற்று இப்படத்திற்கு பூஜை போட்டு மூடித்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


























