V4UMEDIA
HomeNewsKollywoodஅந்த தவறை நான் செய்திருக்க கூடாது ! தளபதி விஜய் குறித்து மனம்திறந்த இயக்குனர் சேரன்

அந்த தவறை நான் செய்திருக்க கூடாது ! தளபதி விஜய் குறித்து மனம்திறந்த இயக்குனர் சேரன்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை தன் அயராத உழைப்பால் பிடித்துள்ளார் இயக்குனர் சேரன். இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் நடிகர்க வெற்றி பெற்றுள்ளார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடு கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என பல ஹிட் படங்களை இயக்கியவர். இவர் சமீபத்தில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

Cheran: I shouldn't have missed the opportunity to direct Vijay

அவர் கூறியது “ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.

அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.

அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்.. அவ்வளவு டெடிகேஷன்… அதுவே இன்று அவரின் உயரம்” என கூறியுள்ளார்.

ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.#ThalapathyVijay @Jagadishbliss https://t.co/AxdY12Y6tK
— Cheran (@directorcheran) June 24, 2020

Most Popular

Recent Comments