V4UMEDIA
HomeNewsKollywoodவிக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் முதல் பாடல் !

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் முதல் பாடல் !

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். சியான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

Image


இந்த நிலையில் கோப்ரா படக்குழு சியான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. “தும்பி துள்ளல்” என்ற முதல் சிங்கிள் வரும் ஜூன் 29ம் தேதி திங்கள் மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டை சற்று வித்யாசமாக, விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கியூட்டான கார்டூன் போஸ்டருடன் திருமண அழைப்பிதழ் போன்று டிசைன் செய்து வெளியிட்டுள்ளனர்.

Image

A virtual musical celebration like never before!
An open invite to all music & movie lovers right at ur homes!#CobraFirstSingle#ThumbiThullal from Monday 5pm #ChiyaanVikram‘s #Cobra @AjayGnanamuthu @arrahman @SrinidhiShetty7 @SonyMusicSouth @JioSaavn @proyuvraaj pic.twitter.com/9GYK4MFS3C— Seven Screen Studio (@7screenstudio) June 26, 2020

Most Popular

Recent Comments