V4UMEDIA
HomeNewsKollywoodகொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் ! அதிர்ச்சியில் கோலிவுட்

கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் ! அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினமும் நேற்று மட்டும் சென்னையில் 1500க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Image

இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸால் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் தனஞ்செயன் அவர்களின் சகோதரர் பலியாகி உள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நாட்களுக்கு முன் தனது சகோதரர் மற்றும் அவருடைய மனைவி, மகன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது சகோதரர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். அவருடைய மனைவி, மகன் ஆகிய இருவரும் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தனஞ்சயன் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் அனைவரும் வீட்டில் கவனமாக இருங்கள், அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் யாரும் வெளியே வரவேண்டாம் என தனஞ்செயன் அறிவுறுத்தியுள்ளார்.

#coronavirus took away my dear elder brother. He was healthy, all of 59 & passed away in just 5 days of infection. His family (wife & son) are tested +Ve & under treatment. While many are coming out of it, few losing their lives. We are in a state of shock. Be safe friends🙏 pic.twitter.com/9f9FA9P1qg— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) June 25, 2020

Most Popular

Recent Comments